வடக்கில் இரு பிரதேச செயலர் பிரிவுகளில் 398 கிராமங்கள் முடக்கலில்..! வறுமையில் வாடும் மக்கள், உதவுமாறு கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
வடக்கில் இரு பிரதேச செயலர் பிரிவுகளில் 398 கிராமங்கள் முடக்கலில்..! வறுமையில் வாடும் மக்கள், உதவுமாறு கோரிக்கை..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பிரதேச செயலர் பிரிவுகளில் 398 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் முடக்கப்பகுதிக்குள் வறுமை தலைவிரித்தாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவினை கொண்ட இருபிரதேச செயலகங்கள் கடந்த 17.05.21 நள்ளிரவு தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

65 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 398 கிராமங்களை சேர்ந்த 27 ஆயிரம் வரையான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றுடன் 20.05.21 மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்ல முடியாத நிலை காணப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.

வீடுகளில் சமைப்பதற்கு உணவுப்பொருட்கள் இல்லாத நிலையில் நாளாந்தம் கூலிவேலை செய்து குடும்பத்தினை நடத்தி செல்லும் 

வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் தனிமைப்படுத்தல் தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால் 

அரசாங்கம் மக்களுக்கான உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு