SuperTopAds

அதியுச்ச ஆபத்தில் இலங்கை..! ஒரு நாளில் 3623 பேருக்கு கொரோனா தொற்று 36 மரணங்களும் பதிவானது..

ஆசிரியர் - Editor I
அதியுச்ச ஆபத்தில் இலங்கை..! ஒரு நாளில் 3623 பேருக்கு கொரோனா தொற்று 36 மரணங்களும் பதிவானது..

இலங்கையில் ஒரு நாளில் 3623 கொரோனா தொற்றாளர்களும், சுமார் 36 கொரோனா மரணங்களும் அதிநேற்றய தினம் பதிவாகியுள்ளது.

இதுவரை ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், நாட்டில் நேற்று 36 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஒரே நாளில் பதாவான அதிகூடிய மரண எண்ணிக்கை இதுவாகும். மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 343 பேர் 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 367 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர்.

 27 ஆயிரத்து 339 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 51 பேர் உயிரிழந்துள்ளனர்.