SuperTopAds

வடக்கில் உச்ச அளவில் கொரோனா பரவல்..! இன்றும் 137 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் உச்ச அளவில் கொரோனா பரவல்..! இன்றும் 137 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ். மாவட்டத்தில் 69 பேர் உட்பட வடக்கில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இன்றைய தினம் 840 பேருக்கு நடத்தப்பட்டPCR பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 69 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும்,

மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேருக்கும் ஆக 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் 40 பேருக்கு தொற்று.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒருவருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 38 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேருக்கு தொற்று.

கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையில் 16 பேருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 9 பேர் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள்.

வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று.

மன்னார் வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 69 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலையில் 5 பேருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில்  நான்கு பேருக்கும்,தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 28 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், 

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.