SuperTopAds

பொதுச் சுகாதார பரிசோதகர் என கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்த திருடன்..!

ஆசிரியர் - Editor I
பொதுச் சுகாதார பரிசோதகர் என கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்த திருடன்..!

மாங்குளம் - புதிய கொலணி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் பொதுச் சுகாதார பரிசோதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நுழைந்த நபர் வீட்டிலிருந்த வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்திவைத்து அச்சுறுத்தி தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. பொதுசுகாதார பரிசோதகர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபர் வீட்டிற்குள் நுளைந்து விபரம் எடுப்பதாக கூறிவிட்டு தனிமையில் இருந்த வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்திவைத்துள்ளதுடன்,

சங்கிலியினை அறுத்து செல்ல முற்பட்டபோது வயோதிப பெண் தனது சங்கிலியினை இறுகப்பற்றிக்கொண்டதால் சங்கிலி அறுந்து சிறு துண்டு கையில் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் ஓடிவந்துள்ளதால் 

கொள்ளையன் தப்பி ஓடியுள்ளான் இச்சம்பவம் குறித்து மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளார்கள்.