SuperTopAds

வட மாகாணத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! 64 வயதான முதியவர்..

ஆசிரியர் - Editor I
வட மாகாணத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! 64 வயதான முதியவர்..

வடமாகாணத்தில் 4வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. மன்னார் - திருக்கேதீஸ்வரத்தை சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இது குறித்து மன்னார் பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதன் கூறுகையில், கொரோனா தொற்றுக்குள்ளான திருக்கேதீஸ்வரத்தை

சேர்ந்த 64 வயதான நபர் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையிலேயே அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அவருடைய மரணத்திற்கு கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலே காரணம் என மேலும் தெரிவித்தார்.