யாழ்.மருதங்கேணியில் 5 மாத கர்ப்பவதியான அரச ஊழியரை கடமைக்கு அழைக்கும் மேலதிகாரிகள்..! நடவடிக்கை எடுப்பதாக அரச அதிபர் உத்தரவாதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதங்கேணியில் 5 மாத கர்ப்பவதியான அரச ஊழியரை கடமைக்கு அழைக்கும் மேலதிகாரிகள்..! நடவடிக்கை எடுப்பதாக அரச அதிபர் உத்தரவாதம்..

யாழ்.மருதங்கேணி பகுதியில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் 5 மாத கர்ப்பவதியான ஊழியரை கடமைக்கு வருமான மேலதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கர்ப்பவதி பெண்களை கடமைக்கு அழைக்கவேண்டாம். என அரசு அறிவித்திருக்கின்றது. 

இந்நிலையில் யாழ்.மருதங்கேணியி பகுதியில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் 5 மாத கர்ப்பவதியான அரச ஊழியரை கடமைக்கு வருமாறு மேலதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக கூறப்படுகின்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் கணபதிப்பிள்ளை மகேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கர்ப்பவதிகளை யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமைக்கு அமர்த்த வேண்டாம் என

எழுத்து மூலம் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் சுகாதார வழிகாட்டி வெளியிடுவதற்கு முன்னரே அவர்களின் பாதுகாப்பு கருதி கடமையிலிருந்து தற்காலிகமாக நிறுத்துவதற்கான ஆலோசனையை 

தான் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு