யாழ்.சாவகச்சோி சந்தையில் கோழி உரிக்க கொடுத்தவர்கள் 3 மணிநேரம் இறைச்சிக்காக காத்திருந்து வெறுங்கையுடன் திரும்பிய பரிதாபம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி சந்தையில் கோழி உரிக்க கொடுத்தவர்கள் 3 மணிநேரம் இறைச்சிக்காக காத்திருந்து வெறுங்கையுடன் திரும்பிய பரிதாபம்..

யாழ்.சாவகச்சோி சந்தையில் கோழி உரிக்க கொடுத்தவர்கள் வெறுங்கையோடு வீடு திரும்பிய சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

கட்டட ஒப்பந்தகாரர் ஒருவரும், ஆசிரியர் ஒருவருமே 3500ரூபாய் பெறுமதியிலான இரண்டு சேவல்களை இழந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சேரி சந்தை வளாகத்திற்குள் உள்ள கோழிக் கடைக்கு வந்த இருவர் ஆளுக்கு ஓர் சேவல் வாங்கியுள்ளனர். 

வாங்கிய சேவல்களை எங்கே உரிப்பது என அவர்கள் ஆராய நபர் ஒருவரை சந்தையில் நின்ற சிலர் அடையாளம் காட்டியுள்ளனர்.

குறித்த நபரும் பத்து நிமிடத்தில் உரித்த கோழிகளுடன் வருகிறேன் எனக் கூறிவிட்டு மயானப் பக்கமாக சேவல்களுடன் சென்றுள்ளார். 

குறித்த நபர் கோழிகளை உரிக்கும்போது அவ் வழியே வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கண்ணில் கோழி உரிப்பது தென்பட

 குறித்த நபர் பாதி உரித்த கோழியுடன் துவிச்சக்கரவண்டியில் ஓடி பின்னர் துவிச்சக்கரவண்டியைக் கைவிட்டு உரித்த மற்றும் பாதி உயிருள்ள கோழிகளுடன் 

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் ஏறி தப்பித்துச் சென்றுள்ளார். உரித்த கோழிகளுடன் வருவார் என சுமார் மூன்று மணி நேரம் சந்தையில் காத்திருந்த நபர்கள் 

ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி பொதுச் சந்தையில் இறைச்சிக்காக கோழிகளை வாங்குவோர் 

அதனை நகரசபையின் இறைச்சிக் கடையில் கொடுத்து உரிக்க முடியுமே தவிர பொது இடங்களில் வைத்து கோழி உரிக்க முடியாது. 

என்ற நகரசபையின் அறிவுறுத்தல் பலகை சிறிய அளவில் இருந்ததால் தான் இவ் விபரீதம் ஏற்பட்டிருப்பதாகவும் அறிவித்தல் பலகையை மக்கள் பார்வைக்கு 

இலகுவான வகையில் பெரிதாக வைக்க வேண்டும் என நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு