யாழ்.நல்லுார் வீதியில் கச்சான் வியாபாரியையும் விட்டுவைக்காத இரும்பு வியாபாரிகள்..! மேசை, கதிரையை திருடி சென்றனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் வீதியில் கச்சான் வியாபாரியையும் விட்டுவைக்காத இரும்பு வியாபாரிகள்..! மேசை, கதிரையை திருடி சென்றனர்..

நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் கச்சான் வியாபாரம் செய்யும் பெண்மணியின் தட்டு முட்டு சாமான்களையும் இரும்பு வியாபாரிகள் திருடி சென்றிருக்கின்றனர். 

நல்லுார் தெற்று வீதியில் கச்சான் வியாபாரம் செய்துவரும் பெண் மணி ஒருவர் வியாபாரம் முடிந்த பின்னர் அருகில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக தனது தட்டுமுட்டு சாமான்களை

வைத்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையல் கடந்தவாரம் முழுநேர பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களாக வியாபாரம் செய்ய முடியாமல்போயுள்ளது. 

பயணத்தடை நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் வந்தபோது மேசை, கதிரை மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் காணாமல்போயுள்ளது. 

கதிரை, மேசையில் பலகைகள் உடைத்து வீசப்பட்டு இரும்பு திருடப்பட்டுள்ளதுடன் பிளாஸ்டிக் பாத்திரங்களும் திருடி செல்லப்பட்டிருக்கின்றது. 

சுமார் 10 ஆயிரம் தொடக்கம் 13 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தனது பொருட்கள் திருடப்பட்டதாக குறித்த பெண்மணி கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு