SuperTopAds

உங்கள் கிராமத்திற்கு வாகனம் வராது, கொரோனா நோயாளிகளை நீங்களே அழைத்து வாருங்கள்..!சுகாதாரதுறை இப்படி கூறுவதாக மக்கள் விசனம்..

ஆசிரியர் - Editor I
உங்கள் கிராமத்திற்கு வாகனம் வராது, கொரோனா நோயாளிகளை நீங்களே அழைத்து வாருங்கள்..!சுகாதாரதுறை இப்படி கூறுவதாக மக்கள் விசனம்..

புதுக்குடியிருப்பு - இருட்டுமடு பகுதியில் நேற்றுமுன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களை அழைத்துச் செல்ல சுகாதார பிரிவினர் மறுத்துள்ளதுடன்,

உடையார்கட்டுவரை நோயாளிகளை அழைத்துவருமாறு சுகாதார பிரிவினர் தமக்கு கூறியுள்ளதாகவும் அதனால் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் சுமார் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (18) நண்பகல் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா மருத்துவமனை செல்தயாராகுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஆனாலும் நேற்று மாலை வரை சுகாதார பிரிவினர் வீட்டிற்கு சொன்று ஏற்றாத நிலையில் இருட்டுமடு கிராமத்திற்கு பேருந்து வராது என்றும் அவர்களை அவர்களின் உறவினர்கள் ஏற்றிக்கொண்டு 

உடையார் கட்டு முதன்மை வீதிக்கு கொண்டுவந்து விடுமாறு அறிவித்துள்ளதால் குடும்பத்தினை சேர்ந்தவர்கள் குழப்ப நிலைஅடைந்துள்ளார்கள்.

பொதுசுகாதார பரிசோதகர்களின் இவ்வாறான நடவடிக்கையினால் கொவிட் தொற்று குடும்பத்தினை சேர்ந்தவர்களின் ஏனையவர்களுக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது

 இனம் காணப்பட்ட தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் காணப்படுகின்றார்கள் அவர்களை விரைவாக கொரோன மருத்துவமனைக்கு ஏற்றிசெல்லுமாறும் தெரிவித்துள்ளார்கள்.