யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! இன்றும் 95 பேருக்கு தொற்று, ஒரு மரணம் பதிவு, வடக்கில் 137 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..
யாழ்.மாவட்டத்தில் 95 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.
இதன்படி 937 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 95 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 7 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 2 பேருக்கும், ஒட்டுசுட்டானில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேருக்கு தொற்று.
கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர், மேலும் சிலர் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களாவர். ஏனையோர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.
வவுனியா மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்குக்கும், வவுனியா வைத்தியசாலையில் 2 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 95 பேருக்கு தொற்று.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்.குருநகரை சேர்ந்த 66 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நெல்லியடி வெதுப்பகம் ஒன்றில் 33 பேருக்கும், நெல்லியடி வர்த்தகர்கள் 3 பேருக்குமாக 36 பேருக்கு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தெல்லிப்பழை அந்தோனிபுரம் கிராமத்தில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட 17 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 15 பேருக்கும்,
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.