யாழ்.மாவட்டத்தில் 91 பேர் உட்பட வடக்கில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..
யாழ்.மாவட்டத்தில் 91 பேர் உட்பட வடக்கில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
இன்றைய தினம் 745 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 91 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேருக்கும்,
வவுனியா மாவட்டத்தில் 7 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்குமாக 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தொிவிக்கப்பட்டிருக்கின்றது.