யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் பதற்றம்..! அஞ்சலி செலுத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது, பொலிஸார் எச்சரிக்கை..

யாழ்.நவாலி - சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் விமான குண்டுவீச்சு மூலம் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று காலை தேவாலயத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்த நிலையில் அங்கு கூடிய பொலிஸார் அஞ்சலி செலுத்தினால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.