யாழ்.சுதுமலை அம்மன் கோவில் முடக்கப்பட்டது..! திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தலில்..

யாழ்.சுதுமலை அம்மன் கோவில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதுடன் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் ஆலயத்தின் குருக்கல் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.
இதனையடுத்து வேறொரு குருக்கல் மூலம் திருவிழா தொடர்ந்தும் நடைபெற்றிருந்த நிலையல் 2வது குருக்கலுக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து,
ஆலயம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதுடன், திருவிழாவில் கலந்து கொண்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.