பருத்தித்துறை மீன் சந்தை முடக்கப்பட்டது..! சுகாதார நடைமுறை மீறலால் சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..

யாழ்.பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்கப்படுவதாக சுகாதார பிரிவு அறிவித்திருக்கின்றது.
மீன் சந்தை வியாபாரிகளுக்கு சுகாதார நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டபோதும் மிகமோசமாக சுகாதார நடைமுறைகளை மீறியதுடன்,
சுகாதார பிரிவின் முற்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியின்
உத்தரவிற்கமைய சந்தை மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் அதிகரித்துள்ளமையினால்
சந்தைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.