யாழ்.பல்கலைகழகம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்கள்..! சுற்றிவர குவிக்கப்பட்டதால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்கள்..! சுற்றிவர குவிக்கப்பட்டதால் பதற்றம்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்.பல்கலைகழக வளாகத்தை சூழ படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படலாம் என புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக படைத்தரப்பு தகவலகள் கூறுகிறது. 

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்று நிலமைகளை அடுத்து, இம் மாதத் தொடக்கத்தில் இருந்து, நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, 

யாழ்.பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்கைகள் தவிர மாணவர்கள் உள் நுழைவு தடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. 

எனினும் பலகலைக்கழகத்தினுள் மாணவர்கள் சிலர் நாளை 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை செய்வதற்குத் தயாராகி உள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதனால், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 

பல்கலைக்கழகத்தைச் சுற்றி இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு