முள்ளிவாய்க்காலில் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு..! சகல வீதிகளும் மூடப்பட்டு பொலிஸ், இராணுவ காவல்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்காலில் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு..! சகல வீதிகளும் மூடப்பட்டு பொலிஸ், இராணுவ காவல்..

2009ம் ஆண்டு இறுதி போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நாளை அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடாத்த 27 பேருக்கு பொலிசார் நீதிமன்றில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

இதேவேளை இன்றும் சுமார் 20 பேருக்கு மேல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறவுள்ளதாக அறியமுடிகிறது.இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் அனைத்து பாதைகளையும் தடை செய்வதற்கு பொலிஸார்,

வீதிக் தடைகளை இடுவதற்கு பொருட்கள் கொண்டு வந்து இறங்கியுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் கப்பல் வீதி சந்தியில் பொலிஸ் காவல் போடப்பட்டு 

சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு