SuperTopAds

வடமாகாணம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம்..! இன்றும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம்..! இன்றும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடமாகாணத்தில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி இன்றைய தினம் 642 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில், யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேருக்கும்,

வவுனியா மாவட்டத்தில் 11 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் 7 பேருக்கும் என 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேருக்கு தொற்று.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும், புதுக்குடியிருப்பில் 12 பேருக்கும் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் தொற்று உறுதியான 12 பேரும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களாவர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று.

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கும், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வவுனியா மாவட்டத்தில் 11 பேருக்கு தொற்று. 

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தனிமைப்படுத்தலில் இருந்தவர், மேலும் பூவரசங்குளம் வைத்தியசாலையில் 6 பேருக்கும் யாழ்.பல்கலைகழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று. 

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கு தொற்று. 

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பருத்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், சாவகச்சோி, ஊர்காவற்றுறை, சங்கானை பகுதிகளில் 4 பேருக்கும்

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.