நாட்டில் முழு நேர பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி போதை களியாட்டம்..! 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது..
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக முழு நேர பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொழும்பு ராஜகிரிய பகுதியில் போதைப் பொருள் களியாட்டம் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
களியாட்டம் நடத்தப்பட்ட இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்தள்ளதுடன், 5 கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டிருக்கின்றனர். அவர் கண்டி பகுதியை சேர்ந்தவர் எனவும்
பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.