இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு வந்தது!! -இன்று இறுதிச் சடங்கு-
இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளப் பெண் சவுமியாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடைபெற்று வருகின்றது.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியால் நேற்று சனிக்கிழமை காலை அவர் உடல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. மத்திய அமைச்சர், இஸ்ரேல் தூதர் ஆகியோர் அஞ்சலிக்குப் பின் அவரது உடல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் கொச்சியில் உள்ள இடுக்கியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சவுமியாவின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளது.