முழு நேர பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கபடுமா..? இன்று தீர்மானம் என்கிறார் இராணுவ தளபதி..
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள முழுநேர பயண தடையை தொடர்ந்தும் 14 நாட்களுக்கு நீடிக்குமாறு எம்மிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
நீண்ட நாள் விடுமுறை என்பதால் மக்களை வெளியில் நடமாட விடாது முடக்கும்வகையில் 3 நாட்களுக்கு முழுமையான பயண தடையை விதித்திருக்கிறோம். நாட்டில் தீவிரமான கொரோனா பரவல் நிலையை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி நாளை அதிகாலை 4 மணாவரை முழுநேர பயண தடை அமுலில் இருக்கும் என்பதுடன், நாளையிலிருந்து இரவு நேர பயணத்தடை எதிர்வரும் 31ம் திகதிவரை அமுலில் இருக்கும் எனவும் இராணுவ தளபதி கூறியுள்ளார்.