SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் தொடரும் ஆபத்து, இன்று 36 பேருக்கு தொற்று..! யாழ்.மாவட்ட செயலக ஊழியர்கள் இருவர் உட்பட 4 அரச உத்தியோகத்தர்கள் உள்ளடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் ஆபத்து, இன்று 36 பேருக்கு தொற்று..! யாழ்.மாவட்ட செயலக ஊழியர்கள் இருவர் உட்பட 4 அரச உத்தியோகத்தர்கள் உள்ளடக்கம்..

யாழ்.மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கில் இன்று 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இன்றைய தினம் 858 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேருக்கும்,

வவுனியா மாவட்டத்தில் 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் ஆக 61 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 முல்லைத்தீவு மாட்டத்தில் 6 பேருக்கு தொற்று.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று.

கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் பூநகரி பிரதேச செயலக ஊழியர்களாவர். தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 11 பேருக்கு தொற்று.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 36 பேருக்கு தொற்று.

யாழ்.மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 16 பேருக்கும் யாழ்.சிறைச்சாலையில் இருவருக்குமாக 36 தொற்று செய்யப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இருவர் உள்ளடங்குகின்றனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோப்பாய் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.