நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! சர்வதேச உதவியை கோருகிறது இலங்கை, ஒட்சிசன், மற்றும் சுவாச கருவிகள் தேவை..
நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணம் உள்ள நிலையில் உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்கவேண்டும். என இலங்கை கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இது குறித்து கொரோனா கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,
எங்கள் மருத்துவமனைகளுக்கு ஒட்சிசன் தேவை, எங்கள் தீவிர கிசிச்சைப் பிரிவினை விஸ்தரிக்கும் போது செயற்கை சுவாசக்கருவிகள் தேவை எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சிகிச்சை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில்
உதவி வழங்கும் சமூகம் உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.