முக கவசம் அணியாதோரை கைது செய்து துாக்கி செல்லவேண்டாம்..! பொலிஸாருக்கே பாதிப்பு, பொலிஸ்மா அதிபர் அதிரடி உத்தரவு..
பொது இடங்களில் முக கவசம் இல்லாமல் நடமாடுவோரை சுற்றிவளைத்து கைது செய்து துாக்கி சென்று வாகனங்களில் ஏற்றவேண்டாம். என பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வந்த கைது முறையை நிறுத்துமாறு விசேட சுற்றறிக்கை மூலம்
பொலிஸ்மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.முகக் கவசம் அணியாதவர்களைக் கைது செய்து, தூக்கிச் செல்லும்போது,
பொலிஸ் அதிகாரிகளுக்கும் கொரோனாத் தொற்று பரவும் அபாயம் இருக்கின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை ஒரே வாகனத்தில் கொண்டு செல்வதன் ஊடாக கொரோனா பரவும் அபாயம் இருக்கின்றது எனவும்
பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், முகக் கவசம் அணியாதவர்களைப் பாதுகாப்பான முறையில் கைது செய்து,
தனியான வாகனங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.