SuperTopAds

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

வடமாகாண கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என கூறியிருக்கும் காலநிலை அவதானியும் யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளருமான நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக வடக்கின் கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவது பாதுகாப்பானது.

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த நிலையானது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சூறாவளி அபாயம் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் வட பகுதியில் சூறாவளி அபாயம் இல்லாதபோதும் காற்றின் வேகம் சற்று அதிகமாக வீசும்.

அதுமட்டுமல்லாது நாளை சனிக்கிழமை தொடக்கம் வடபகுதியில் ஒரு சில நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது.

மன்னாரிலிரந்து நெடுந்தீவு வரையான கடற்பகுதி வழைமையை விட கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லாது பாதுகாப்பாக இருப்பது நன்மை பயக்கும்.

என அவர் மேலும் தெரிவித்தார்.