யாழ். மாவட்டத்தில் தீவிரமாகும் கொரோனா அபாயம்..! இன்றும் 48 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ். மாவட்டத்தில் தீவிரமாகும் கொரோனா அபாயம்..! இன்றும் 48 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்புடுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 48 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று.

கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பகுதியை சேர்ந்த ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 9 பேருக்கு தொற்று.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த 2 பேருக்கும், தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்குமாக 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 48 பேருக்கு தொற்று.

யாழ்.மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 40 பேருக்கும் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என

 48 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்,

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு