SuperTopAds

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திட்டமிட்டபடி நடைபெறும்..! நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திட்டமிட்டபடி நடைபெறும்..! நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பு அறிவிப்பு..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பு அறிவித்திருக்கின்றது. 

தமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூர யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினம் திட்டமிட்டபடி இடம்பெறும்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இறுதி யுத்தம் இடம்பெற்று 12 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 

அதனை நினைவு கூறும் உரிமை ஒவ்வொரு தமிழனுக்கும் உரித்தான மத உரிமையாகும். இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டு 

உப்பில்லாக் கஞ்சி அருந்தியதை ஞாபகமூட்டும் வகையில் வீடுகளில் உள்ள இளம் தலைமுறைக்கு உப்பில்லா கஞ்சியை வழங்கி ஞாபகமூட்டுங்கள்.

ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் மாலை 6 மணிக்கு மணிகளை ஒலிக்க விடுவதுடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் ஈடுபடுங்கள்.

தற்போது நாட்டில் பரவியுள்ள கொவிட்-19 சூழலில் தத்தமது வீடுகளின் முன் தீபம் ஏற்றி எமக்கான உரிமைகளை உணர்வுபூர்வமாக அனுஷ்ரிக்க வேண்டும்.

இறுதி யுத்தத்தில் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழ் மக்களை அஞ்சலி செலுத்துவது ஒவ்வரு தமிழனினதும் உரிமையாகக் கருதப்படும் நிலையில் 

அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமைகிடையாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.