தினசரி தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்..! 25 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சையில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
தினசரி தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்..! 25 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சையில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை..

நாட்டில் நாளொன்றுக்கு 2500 ற்கும் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் அடுத்துவரும் நாட்களில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வெளிநாட்டிலிருந்து வந்த ஏதேனுமொரு பிரஜை ஊடாகவே இங்கிலாந்து வைரஸ் இலங்கையிலும் நுழைந்திருக்கக் கூடும்.

இந்திய வைரசும் இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரஜையொருவரின் மாதிரியிலேயே இனங்காணப்பட்டுள்ளது. 

எனவே இது போன்ற அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

எனவே இவ்விவகாரத்தில் தற்போது வழமையை விட மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

25 000 அதிகமானோர் சிகிச்சையில்

நாட்டில் முதன் முறையான புதனன்று 25 000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் ஒரே நாளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை நேற்று 2269 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 796 ஆக அதிகரித்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 8802 பேர் குணமடைந்துள்ளதோடு , 24 932 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு