கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை..! 6 வருட சிறைத்தண்டணை விதிக்கப்படலாம்..
நாடு முழுவதும் இன்று இரவு 11 மணி தொடக்கம் இறுக்கமான பயண கட்டுப்பாடு அமுலாகவுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
தனிமைப்படுத்தல் அல்லது போக்குவரத்து சட்டங்களை மீறுபவர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
எந்தவொரு தனிமைப்படுத்தல் அல்லது போக்குவரத்துக் கட்டுப்பாடுகளின் மீறல்களை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்.