SuperTopAds

நாடு முழுவதும் கண்காணிப்பு பணியில் 20 ஆயிரம் பொலிஸார் கண்காணிப்பு பணியில்..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் கண்காணிப்பு பணியில் 20 ஆயிரம் பொலிஸார் கண்காணிப்பு பணியில்..!

நாடு முழுவதும் சாதாரண ஊரடங்குமுறை இன்று இரவு 11 மணிக்கு அமுலாகும் நிலையில் 20 ஆயிரம் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

போக்குவரத்து கட்டுப்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக 

நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் அவரது வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அதேவேளை நிறுவனஙகள் மூடப்படலாம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் போக்குவரத்து முடக்கம் மீறப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.