SuperTopAds

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடை..! 16ம் திகதி தொடக்கம் 22ம் திகதிவரை தடை அமுலில் இருக்கும்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடை..! 16ம் திகதி தொடக்கம் 22ம் திகதிவரை தடை அமுலில் இருக்கும்..

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வினை இம்முறை நடாத்துவதற்கு பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவு பெற்றிருக்கின்றனர். 

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் செய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளார்கள்.கொரோனா நிலையினை கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை 

முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது மக்கள் கூடக்கூடாது பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும் இந்த தடை உத்தரவினை முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்றில் வழக்கு சமர்ப்பித்து 

அதற்கான அனுமதியினை பெற்றுள்ளார்கள். முல்லைத்தீவு பொலீஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன்,ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன்,க.விஜிந்தன்,ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஏ.ஆர் 418 கீழ் 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவ மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவினை பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார்தெரிவித்துள்ளார்கள்.