SuperTopAds

இன்று நள்ளிரவு தொடக்கம் 17ம் திகதிவரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி மறுப்பு..! பொலிஸ் பேச்சாளர் புதிய அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு தொடக்கம் 17ம் திகதிவரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி மறுப்பு..! பொலிஸ் பேச்சாளர் புதிய அறிவிப்பு..

இன்றைய தினம் இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கள் கிழமை அதிகாலை 4 மணிவரை நாடு முழவதும் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார். 

அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே பயணத்தினை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். நேற்று முதல் மீள அமுல்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணுக்கமைய வெளியில் செல்வதற்கான அனுமதி 

இன்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை செல்லுபடியாகாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னரே தேசிய அடையாள அட்டை முறை செல்லுபடியாகும் என தெரிவித்தார். 

இதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.