SuperTopAds

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை நெருங்க முடியாதவாறு இராணுவம் குவிப்பு..!

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை நெருங்க முடியாதவாறு இராணுவம் குவிப்பு..!

முள்ளிவாய்க்கால் மண்ணில் கடந்த 2009 ஆம் ஆண்டு உயிரிழந்த உறவுகள் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 12 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்ரிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் “பொது நினைவுக்கல்” ஒன்றினை நடுகை செய்வதற்கான முயற்சிகள் நேற்று புதன் கிழமை மாலையில் முன்னெடுக்கப்பட்ட்து

பொது நினைவுக்கல் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அங்கு பதற்றமான சூழல் நிலவியது

குறித்த நிலைமைகளை தொடர்ந்து  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தை சூழவும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அருகாக செல்கின்ற குறித்த வீதியினால் யாரும் செல்லமுடியாது இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர்.

குறித்த பகுதி  நிலைமைகளை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்களையும்  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு செல்ல விடாது திருப்பி அனுப்பியுள்ளனர். 

யாருமே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அணுக முடியாது கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.