யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! இன்று மட்டும் 67 பேருக்கு தொற்று, வடக்கில் 82 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! இன்று மட்டும் 67 பேருக்கு தொற்று, வடக்கில் 82 பேருக்கு தொற்று, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கில் இன்று 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தொிவித்திருக்கின்றார். 

இன்றைய தினம் 977 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் மாகாணத்தில் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறியுள்ள பணிப்பாளர் தொற்றாளர் விபரத்தை வெளியிட்டள்ளார். 

யாழ்.மாவட்டம் - 67 பேருக்கு தொற்று உறுதி. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலையில் 9 பேருக்கும், சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும், 

அச்சுவேலி மற்றும் கோப்பாய் வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவருக்குமாக மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேலும்  சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், 

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டம் - 8 பேருக்கு தொற்று உறுதி.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 5 பேருக்கும், ஒட்டுசுட்டான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டம் - 3 பேருக்கு தொற்று உறுதி.

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும், தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வவுனியா மாவட்டம் - 4 பேருக்கு தொற்று உறுதி.

வவுனியா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு