முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற பகுதியில் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல்..!
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்காக பொது நினைவுக்கல் ஒன்றை நடுகை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் காணப்படுகின்றது.
2009ம் ஆண்டு இறுதிப்போரில் கொல்லப்பட்ட உறவுகளுடைய நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொது கட்டமைப்பினால் நினைவுக்கல் ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
நினைவு முற்றத்தை சூழ இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.