கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதிகளுக்கு சிகிச்சையளிக்க யாழ்.போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை பிரிவு..! பிரதி பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதிகளுக்கு சிகிச்சையளிக்க யாழ்.போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை பிரிவு..! பிரதி பணிப்பாளர் தகவல்..

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண்கள் மகப்பேற்று சிகிச்சையளிப்பதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி எஸ்.பவானந்தராஜா கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண்களின் மகப்பேற்றுக்கு போதனா வைத்தியசாலையில் எவ்வாறான நடைமுறைகள் பின் பற்றப்படுகின்றன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை ஆகிய வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண்களை பராமரிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக விசேட வைத்தியர்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். அங்கு பராமரிக்கப்பட்டு மகப்பேற்றின்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து பாதுகாப்பான மகப்பேற்றை செய்வதற்கான வசதிகள் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கின்றது. 

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதிப் பெண்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதில் நெருக்கடி நிலை காணப்படுகிறது. இதனாலேயே மேற்படி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் 

பாதுகாப்பான மகப்பேற்றுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு