SuperTopAds

இரவு 10 மணியுடன் மக்கள் நடமாட்டத்தை தடைசெய்யுங்கள், மதுபான நிலையங்களை மூடுங்கள்..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு அழுத்தம்..

ஆசிரியர் - Editor I
இரவு 10 மணியுடன் மக்கள் நடமாட்டத்தை தடைசெய்யுங்கள், மதுபான நிலையங்களை மூடுங்கள்..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு அழுத்தம்..

இரவு 10 மணியுடன் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் உத்தரவை வழங்குங்கள் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறும் கேட்டுள்ளது. 

இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா மேலும் கூறுகையில், மதுபானம் விற்கப்படும் இடங்களை முன்கூட்டியே மூடவேண்டியதன் அவசியத்தை ஜனாதபதிக்கு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் தற்போதுகாணப்படும் வைரஸ் எவ்வளவுதூரம் பரவும் என்பதை தெரிவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது எனஅவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவைரசிற்கான பதில் மருத்துவமனை கட்டில்களை அதிகரிப்பதிலோ 

அல்லது தீவிர கிசிச்சை பிரிவுகளை கட்டுப்படுத்துவதிலோ இல்லை மாறாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்தாலே மருத்;துவமனைகளின் திறனை தொடரமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.