இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை மக்கள் நடமாட தடை..! இன்று தொடக்கம் அமுலாகிறது, இராணுவ தளபதி அறிவிப்பு..

நாடு முழுவதும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை பயணிக்க தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
மேற்படி தகவலை இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இந்த நடைமுறை இன்று தொடக்கம் அமுலாவதுடன், எதிர்வரும் 31ம் திகதிவரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.