சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குருந்துாருக்கும், இராணுவம் மற்றும் பௌத்த பிக்குகளுக்கும் விதி விலக்கா? குருந்துாரில் பெருமளவானோர் கூடி விசேட வழிபாடு..

ஆசிரியர் - Editor I
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குருந்துாருக்கும், இராணுவம் மற்றும் பௌத்த பிக்குகளுக்கும் விதி விலக்கா? குருந்துாரில் பெருமளவானோர் கூடி விசேட வழிபாடு..

முள்ளிவாய்க்காலில் கூடினால் பேதமில்லாமல் கூண்டோடு கைது செய்யப்படுவீர்கள். என இராணுவ தளபதி அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை முல்லைத்தீவு - குருந்துார் மலையில் பெருமளவு படையினர் மற்றும் பௌத்த துறவிகள் கூடி இரவிரவாக வழிபாடு நடத்தப்படுவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தொிவிக்கின்றன. 

குருந்துார் மலையில் அகழ்வு நடவடிக்கையின்போது மிக பழமையான கட்டுமானங்கள் வெளிப்பட்டிருக்கும் நிலையில் அந்த இடத்தில் இன்று மாலை நுாற்றுக்கும் மேற்பட்ட படையினர் மற்றும் பௌத்த பிக்குகள் குவிந்திருப்பதுடன், பூசை வழிபாடுகளும், பிக்கு ஒருவரை தங்கவைத்து தொடர்ந்தும் பூசை வழிபாடு நடத்த திட்டமிடப்படுவதாகவும், 

முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தொிவிக்கின்றன. ஊடகவியலாளர்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டுக்காக விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. 

நினைவுகூரலுக்கு மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினால் அரசில்வாதிகள் மக்கள் என்ற வேறுபாடு இல்லாது கைதுசெய்யப்படுவார்கள். இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையில் 

குருந்தூர் மலை எந்த வகையினுள் என கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே வடமராட்சி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வை நடாத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உடமைகளை பறிமுதல் செய்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும். 

Radio