இன்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட யாழ்.மாவட்ட செயலக ஊழியர்கள் எவருக்கும் தொற்றில்லை..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
இன்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட யாழ்.மாவட்ட செயலக ஊழியர்கள் எவருக்கும் தொற்றில்லை..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று 23 அரச ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை. என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

உதவி அரசாங்க அதிபருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உதவி அரசாங்க அதிபருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய 23 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியிருந்தார். 

இந்நிலையில் இன்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்கள் எவருக்கும் தொற்று இனங்காணப்படவில்லை. என மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார். 

Radio