யாழ்.மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கில் இன்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல், விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கில் இன்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல், விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 18 பேர் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர். மிகுதி 4 பேர் எழுமாற்று பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பண்டத்தரிப்பு ஆயுள்வேத வைத்தியசாலை பணியாளர்கள் 3 பேர் உட்பட 5 பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 

வெதுப்பக பணியாளர் ஒருவர் உட்பட இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பருத்துறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றிருந்த ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர்

உட்பட 4 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் இருவருக்குமாக மாவட்டத்தில் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 

இன்று 778 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

Radio