SuperTopAds

பட்டுப்போன மரத்தை வெட்டுவதாக பாசாங்கு செய்து நிழல்தரும் பச்சை மரத்தை வெட்டிய கனவான்கள்..! மக்கள் விழித்துக் கொண்டதால் மரம் தப்பியது..

ஆசிரியர் - Editor I
பட்டுப்போன மரத்தை வெட்டுவதாக பாசாங்கு செய்து நிழல்தரும் பச்சை மரத்தை வெட்டிய கனவான்கள்..! மக்கள் விழித்துக் கொண்டதால் மரம் தப்பியது..

பட்டுப்போன மரத்தை தறிப்பதாக கூறி பச்சை மரத்தை வெட்டிய மர கூட்டுத்தாபனம் குறித்தும், அதற்கு அனுமதி கொடுத்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி இந்துவித்தியாலயம் முன்பாக காணப்பட்ட இரண்டு வீதியுார மரங்களே இவ்வாறு அடியோடு வெட்டி சரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அரச மரக்கூட்டுத்தாபனம் ன தங்களை அடையாளப்படுத்தியவர்களின் கண்காணிப்பில் தனிநபர்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டு குறித் இரண்டு நிழல்தரும் மரங்கள் அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி அக்கராயன் பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த இரண்டு மரங்களும் சுமார் 30 வருடங்களிற்கு மேற்பட்ட கால வளர்ச்சி கொண்டவையாகும். அப்பகுதியில் உள்ள இலங்கை வங்கி, முன்பள்ளி மற்றும் பாடசாலைக்கு செல்லும் மக்களும், 

மாணவர்களுக்கும் நிழல்தரும் மரமாக காணப்பட்ட குறித்த இரண்டு மரங்களையும் அடியுாடு சாய்க்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த நடவடிக்கை பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களால் தடுக்கப்பட்டுள்ளது. 

மக்களின் எதிர்ப்பை அடுத்து இடைநடுவில் குறித்த நடவடிக்கையை அரச மரக்கூட்டுத்தாபனம் கைவிட்டுள்ளது. குறித்த இரு மரங்களும் பட்ட மரங்கள் எனவும் அதனை அகற்றி தருமாறும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ரி.அகிலனினால் 

கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதமானது 13.01.2021 அன்று அரச மரக்கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண பிராந்திய முகமையாளரருக்கு பிரதேச செயலாளர் ரி.அகிலனினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

.திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் அக்கராயன் வீதியில் திருமுறிகண்டி பாடசாலை, முன்பள்ளி மற்றும் இலங்கை வங்கி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி ஒதுக்கீடு பகுதியில் இரண்டு இயவாகை மரங்கள் 

பட்டுப்போய் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவு்ம, அதனை வெட்டி அகற்றுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கமாறும் குறித்த குாரிக்கை கடிதத்தின் ஊடாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ரி.அகிலனால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,

அதற்கு அமைவாக அரச மரக்கூட்டுத்தாபனம் இன்றைய தினம் குறித்த மரத்தினை அகற்றவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த மரத்தினை அகற்றுவதால் சூழல்சார் பாதிப்புக்களை தாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும், 

பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் இளைப்பாறக்கூடிய வகையில் காணப்படும் குறித்த மரத்தை அகற்ற வேண்டாம் எனவும் பிரதேச மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனை அடுத்த குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இயற்கையை பாதுகாத்தல் மற்றும் இயற்கையான சூழலை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்க்பட்டு வருகின்றது. குறிப்பாக குறித்த வேலைத்திட்டமானது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில் பிரதேச செயலாளரினால் பட்ட மரம் என சான்றிதழ் வழங்கப்பட்ட குறித்த இரண்டு மரங்களும்பச்சைப் பசேலென்று இன்றும் காட்சியளிக்கின்றது. இதேவேளை, குறித்த மரம் அகற்றுவதற்கு அகுதியானதா எனவும், 

உண்மையில் மரம் பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதா என்பது தொடர்பிலும் அரச மரக்கூட்டுத்தாபனம் ஆராயாது அதனை அடியுாடு அகற்றுவதற்கு எடுத்த முயற்சியானது மக்கள் மததியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையை பாதுகாக்கவேண்டிய இரு அரச திணைக்களங்கள் இவ்வாறு பொய்யான சான்றிதழ்களை பெற்று, சுற்று சூழலை அழிக்க முற்படுவதானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. 

இரண்டு மரங்களும் எந்தவொரு இடையூறும் இல்லாது காணப்படும் அதேவேளை, மக்களிற்கு நிழல்தரும் வகையில் செழித்து காணப்படும் சூழலில், அது பட்ட மரம் என சான்று வழங்கி அதனை அகற்ற பிரதேச செயலாளர் ரி.அகிலன் எடுத்த முயற்சி தொடர்பில் 

மக்கள் கவலை வெளியிடுகின்றனர். இவ்வாறு, கள நிலைமைகளை ஆராயாது, எழுமாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதானது எதிர்காலத்தில் இயற்கைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும், குறித்த பொய்யான விடயத்தை குறிப்பிட்டு 

இரு மரங்களையும் அகற்ற முற்பட்ட இரு அரச ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகை விடுத்துள்ளனர்.