முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறிய சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் இருவர் உட்பட 9 பேர் கைது..!
முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறிய இரு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
முள்ளியவளை, தண்ணீருற்று, நீராவிப்பிட்டி, பகுதிகளில் சுகாதார பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் நாடாளவியரீதியில் நடைபெற்று வருகின்றது.
இன்னிலையில் முள்ளியவளை பொலிஸார், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போது
இரு சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்கள் இவர்களை இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு
வழக்கு பதிவுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த 9 பேரின் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டநீதவான் நீதிமன்றில்
எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முள்ளியளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள். மக்கள் கூடும் பொது இடங்களில் சுகாதார நடைமுறை கண்காணிப்புக்கள்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.