யாழ்.மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி தெல்லிப்பழை வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்த யாழ்.மாவட்ட செயலக மேலதிக அரச அதிபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 4 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் 3 பேருக்கும் (அவர்களில் ஒருவர் யாழ்.மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர்)

சாவகச்சோி வைத்தியசாலையில் 2 பேருக்கும், பருத்துறை வைத்தியசாலை மற்றும் காரைநகர் வைத்தியசாலை, தலா ஒவ்வொருவருக்கும் யாழ்.திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், 

வேலணையில் ஒருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தர்ம்புரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும்.

வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

மாகாண சுகாதார பணிப்பாளர் தொிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு