SuperTopAds

சரத் வீரசேகரவின் அறிக்கை - சுமந்திரன் எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
சரத் வீரசேகரவின் அறிக்கை - சுமந்திரன் எச்சரிக்கை!

அரசினை எதிர்க்கும் எந்தவொரு அரசியல்வாதியையும் கைதுசெய்து நிர்வாக ரீதியாக தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பிடாமலேயே, அவரது நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவது தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் கருத்து வெளியிட்டுள்ளார்.

"நிர்வாக தடுப்பு உத்தரவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர முடியாது" என்று அமைச்சர் இவ் அவையில் முதல் முறையாக கூறியுள்ளார்.

இந்த சபையின் வரலாற்றில் இது ஒருபோதும் நடந்ததில்லை. இதுவரை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும், குறைந்தபட்சம் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்க முன், அவரது ஆசனத்தை இழந்ததில்லை.

அமைச்சர் சொல்வது ஒரு சட்டவிதியாக அமையுமாயின், மூன்று மாதங்களுக்கு யாராவது நிர்வாக ரீதியாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு அவரது நாடாளுமன்ற இடத்தை இழக்க முடியும்.

இவ்வாறான ஓர் சட்ட விதியை ஏற்றுக்கொள்ள முடியாது! பிரதமரும், ஜனாதிபதியும், என்னுடன் உடன்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

அவ்வாறாயின் அவர்கள் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், அரசினை எதிர்க்கும் எந்தவொரு அரசியல்வாதியையும் கைதுசெய்து நிர்வாக ரீதியாக தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பிடாமலேயே, அவரது நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடும். ” என்றார்.