சமல் ராஜபக்சவை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்!
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், கலையரசன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோரும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.