அச்சுறுத்தும் வகையில் வடக்கில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! இன்று 45 பேருக்கு தொற்று, விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
அச்சுறுத்தும் வகையில் வடக்கில் கொரோனா தொற்று பரவல் தீவிரம்..! இன்று 45 பேருக்கு தொற்று, விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இன்றைய தினம் 721 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ்.கொடிகாமம் சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள பகுதிகளை சேர்ந்த 12 பேருக்கும், 

சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கும், சாவகச்சோி பிரதேச செயலக ஊழியர்கள் 3 பேருக்கும், சாவகச்சோி அரச வங்கி ஊழியர் ஒருவருக்கும், கைதடி அரச திணைக்கள ஊழியர் ஒருவருக்குமாக

தென்மராட்சி பிரதேசத்தில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த இருவர், 

மற்றும் கோப்பாய் வைத்தியசாலை, அச்சுவேலி வைத்தியசாலை ஆகியவற்றின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு சென்றிருந்த 4 பேர், பருத்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர், யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் 

ஒருவர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வவுனியா மாவட்டத்தில் பொது வைத்தியசாலையில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு பொதுச்சுகாதார பரிசோதகர், 

ஒரு பொலிஸ் அதிகாரி, ஒரு பல்கலைகழக மாணவனும் உள்ளடக்கம். அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை, தருமபுரம் வைத்தியசாலை ஆகியவற்றின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றிருந்த 3 பேருக்கு

தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு