வெறிச்சோடி கிடைக்கும் யாழ்.கொடிகாமம்..! இராணுவம், பொலிஸ் பாதுகாப்பு, உள்நுழைவதும் வெளிச்செல்வதும் தடை..

யாழ்.கொடிகாமம் பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டிருப்பதுடன் கொடிகாமம் சந்தை தொகுதியும் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் கொடிகாமம் பகுதி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது. குறித்த பகுதியில் இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உள்பட்ட கொடிகாமத்தில்
இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளதுகொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை
முடக்கப்பட்டுள்ளதுஅதிகளவு கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ
அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.