யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிக்கு கொரோன தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிக்கு கொரோன தொற்று உறுதி..!

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திங்கள் கிழமை இரவு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

உடனடியாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 34வயதான பொலிஸ் உத்தியோகத்தர் 

ஒருவரே இவ்வாறு இடமாற்றம் கிடைத்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமைக்கு இணைந்த சில தினங்களில் தொற்றுக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio