யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை..! யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை..! யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை..

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கூறியிருக்கின்றார். 

இன்று மாலை யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்துகொண்டு மத்திய பேருந்து நிலைய சாரதி நடத்துனர்களுடன் கலந்துரையாடும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

எதிர்வரும் நாட்களில் பேருந்துகளில் ஆசன அளவிற்கு அமைவாக பயணிகளை ஏற்றாதோர் பேருந்துகளில் முகக்கவசம் இன்றி பயணிப்போர் மற்றும் ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக 

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின். தலைமையில் யாழ்ப்பாண பிரதேச செயலர் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி, 

மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

Radio