யாழ்.நகரில் ஆட்டோ சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து துணிகர கொள்ளை..! ஒரு சில நாட்களில் 3 கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் ஆட்டோ சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து துணிகர கொள்ளை..! ஒரு சில நாட்களில் 3 கொள்ளை..

யாழ்.குடாநாட்டில் கடந்த 10 நாட்களுக்குள் 3 ஆட்டோ சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து உடமைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. 

வாடகைக்கு ஆட்டோ எடுக்கும் சிலர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கி நகை மற்றும் பணப்பை ஆகியவற்றை கொள்ளையடித்துவருகின்றனர். 

இச்சம்பவம் ஆணைக்கோட்டை, ஆறுகால்மடம், யாழ்.நகர் பகுதிகளில் இடம்பெற்றிருப்பதாக தொியவருகின்றது. 

இதில் ஆணைக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக் கிழமை வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டியில் ஒருவர் சாவகச்சேரிக்கு பயணித்துள்ளார். 

அவ்வாறு பயணித்தவர்கள் சாவகச்சேரி சந்தியில் யூஸ் பையில் குளிர்பானம் அருந்தியுள்ளனர். அதன் பின்பு கைதடியூடாக கோப்பாய் வீதியில் பயணித்த சமயம் 

முச்சக்கர வண்டிச் சாரதி மயக்கமுற்றுள்ளார். இவ்வாறு மயக்கமுற்றவரின் கழுத்தில் இருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அபகரித்துக்கொண்டு 

முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர் தப்பிச் சென்றுள்ளார். இதனால் வீதியோரம் இருந்த சாரதியை அந்த வீதி வழியாக பயணித்தவர்கள் 

முதலில் மது போதையில் வீழ்ந்து கிடப்பதாகவே எண்ணியதனால் தாமதித்தே வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

முச்சக்கர வண்டிச் சாரதி தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில. அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேபோன்று கடந்தவாரம் வாடகைக்கு அமர்த்திய ஆட்டோ சாரதி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்த கொள்ளையன் ஆட்டோ சாரதி அணிந்திருந்த

ஒர பவுண் தங்க மோதிரத்தை கொள்ளையிட்டு சென்றிருந்தார். அதேபோல் மற்றொரு சாரதியிடம் 11 ஆயிரம் பணம் கொள்ளையிடப்பட்டது. 

இந்த இரு சம்பவங்களும் ஆறுகால்மடம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

Radio